» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவின் முதுகில் குத்திவிட்டனர்: கர்நாடக காங்கிரஸ் குற்றச்சாட்டு

செவ்வாய் 27, ஜூலை 2021 11:40:47 AM (IST)

பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவின் முதுகில் குத்திவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்திருக்கிறார். இந்நிலையில், பெங்களூருவில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவுக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுத்ததில்லை. கொரோனா சந்தர்ப்பத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தியது. அதை தவிர்த்து காங்கிரஸ் கட்சி, எடியூரப்பாவுக்கு எந்த விதமான நெருக்கடியும் கொடுத்ததில்லை.

பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவுக்கு தொல்லை கொடுத்தனர். எடியூரப்பா மீது கவர்னரிடம் ஈசுவரப்பா புகார் அளித்தார். முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவதற்கு தேர்வு எழுதி இருப்பதாக மந்திரி யோகேஷ்வர் கூறி வந்தார். யத்னால் எம்.எல்.ஏ. எடியூரப்பாவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறி வந்தார். அவர்கள் மீது பா.ஜனதா மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்நாடகம் மற்றும் தேசிய அளவிலான பா.ஜனதா தலைவர்கள், எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றதில் இருந்தே தொந்தரவு கொடுத்து வந்தனர். எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எடியூரப்பாவுக்கு எதிராக பேசியவர்களை கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லை. பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவின் முதுகில் குத்தி விட்டனர். அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.அடுத்த முதல்-மந்திரி யார்? என்பது பற்றி காங்கிரசுக்கு கவலை இல்லை. 

அதுபற்றி பா.ஜனதா மேலிடம் தான் சிந்திக்க வேண்டும். எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்திருப்பதால் காங்கிரசுக்கு, எந்த ஆதாயமும் இல்லை. தற்போது எடியூரப்பா பதவி விலகி உள்ளார். 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சியையே மக்கள் அதிகாரத்தில் இருந்து விலக்குவார்கள். காங்கிரசில் சேர விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும், விண்ணப்பிக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory