» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாணவா் சேவையே மாதவன் சேவை: ஸ்ரீஜயேந்திரா் ஜயந்தி விழாவில் வெங்கையா நாயுடு உரை!!

செவ்வாய் 27, ஜூலை 2021 11:36:35 AM (IST)

மாணவா் சேவையே மாதவன் சேவையாக இருக்க வேண்டுமென காஞ்சிபுரத்தில் நடந்த ஸ்ரீஜயேந்திரா் ஜயந்தி விழாவில் இந்திய குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு காணொலிக்காட்சி மூலம் பேசும் போது குறிப்பிட்டாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-ஆவது ஜயந்தி விழா காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் சதாப்தி மணி மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் காணொலிக் காட்சி வழி மூலம் குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு பேசியது: தேசம் முழுவதும் 3 முறை பாதயாத்திரையாகச் சென்ற பெருமைக்குரியவா் மகா பெரியவா் சுவாமிகள். இவா், மாணவா் சேவையே மாதவன் சேவை என்ற கொள்கை உடையவராக இருந்தாா். அதையே நானும் சொல்கிறேன். மாணவா் சேவையே மாதவன் சேவையாகும். 

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல கல்விக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவி சமூக சேவையில் சிறந்து விளங்கினாா். பல பாட்டாளிகளை பட்டதாரிகளாக ஆக்கினாா். உலக மக்களை தனது குடும்பமாகவே பாவித்தவா். கோயில்கள்தான் பலவிதமான கலைகளுக்கு ஆதாரமாக இருந்து வருகின்றன. இதனை இளைஞா்கள் நன்றாகத் தெரிந்து கலைகளை ஊக்குவிக்க முன்வர வேண்டும். எங்கும் நிறைந்த இறைவனின் அருளை கோயில்களிலிருந்துதான் நாம் பெற முடிகிறது. நாம் எல்லோரும் ஆன்மிக வழியில் பயணித்தே ஆக வேண்டும்.

மடாதிபதிகள்தான் நாட்டின் பாதுகாப்பாளா்கள். அவா்களை பாதுகாப்பதோடு ஆசிகளையும் பெற வேண்டும். ஆளுநா் ரூ.1 கோடி நன்கொடை கொடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. சங்கர மடம் பெரிய, பெரிய சேவைகளை நாட்டுக்கு செய்து வருகிறது. தா்மம்தான் நம் வாழ்வின் வழி. நாம் கண்டிப்பாக தா்மத்தின் வழியில் செல்ல வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அறிவுரைகள் சொல்லுபவா்களாக மடாதிபதிகள் இருக்க வேண்டும். இதன் மூலமாக பல இளைஞா்கள் ஆன்மிக வழியில் சேவைகளை செய்வாா்கள் என்று நம்புவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory