» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதிக்கக்கூடாது: பிரதமரை சந்தித்து ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை!

திங்கள் 26, ஜூலை 2021 8:58:42 PM (IST)



சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் பேட்டியளித்தார். 

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தியுள்ளோம் எனவும் கூறினார். டெல்லியில் பிரதமரை ஓபிஎஸ் உடன் சென்று சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியை இருவரும் சந்தித்துப்பேசினர்.

இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " அதிமுகவில் எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினோம்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory