» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் சிவ நாடார் ராஜிநாமா

செவ்வாய் 20, ஜூலை 2021 5:40:02 PM (IST)

ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமார், நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

பிரபல முன்னணி மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்தை சிவ நாடார் தனது நண்பர்களுடன் கடந்த 1976 ஆம் ஆண்டு தொடங்கினார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சிவ நாடாருக்கு 60%க்கும் அதிகமான பங்குகள் உள்ளன. 45 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தை  நடத்தி வந்த இவர், நிர்வாக இயக்குநர் பதவியை நேற்று ராஜிநாமா செய்துள்ளார். தற்போது அவருக்கு வயது 76. 

எனினும் அவர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் ஆலோசகராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவ நாடார் ராஜினாமா செய்ததையடுத்து, தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமார், நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியாவில் தற்போது மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக ஹெச்.சி.எல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory