» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலக யோகா தினம்: திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை

திங்கள் 21, ஜூன் 2021 8:40:51 AM (IST)

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்த கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பேசினார்.

அதைத் தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. முதல் சர்வதேச யோகா தினம், 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) 7-வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது.

இப்போது கொரோனாவின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வரும் பெரும் போராட்டத்தில் நாடு ஈடுபட்டுள்ளதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருப்பதால், 7-வது சர்வதேச யோகா தினம் எளிமையாக கொண்டாடப்படுகிறது. 7-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை. இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் மத்திய மந்திரிகள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர். நோய் நாடி...என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory