» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டின் சட்டப் பாதுகாப்பு : புதிய விதி முறைகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்க மறுப்பு

புதன் 16, ஜூன் 2021 11:31:10 AM (IST)

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை ஏற்காததால், நாட்டின் சட்டப் பாதுகாப்பை ட்விட்டர் நிறுவனம் இழந்துவிட்டது.

ஆனால் இது நிரந்தரமல்ல என்றும், இந்தியாவின் சமூக ஊடங்களுக்கான புதிய விதிமுறைகளை ஏற்கும்பட்சத்தில், அது நாட்டின் சமூக ஊடங்களுக்கான சட்டப் பாதுகாப்பைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, மே 26-ஆம் தேதிக்குப் பிறகு, ட்விட்டர் நிறுவனத்தின் மீது ஏதேனும் வழக்குத் தொடரப்பட்டால், அது நாட்டின் சமூக ஊடகங்களுக்கான சட்டப் பாதுகாப்பை நாட முடியாது. மேலும், தனது நிறுவனம் ஒரு சமூக ஊடகம் என்று கூறிக் கொள்ளவோ, விதிவிலக்குக் கோரவோ இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள் கடந்த 26-ஆம் தேதி அமலுக்கு வந்தன. அதன்படி 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், குறைதீா்க்கும் அலுவலா், கட்டுப்பாட்டு அலுவலா், தலைமை குறைதீா்க்கும் அலுவலா் ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த அலுவலா்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை கூகுள், ஃபேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதன்படி, குறைதீா்க்கும் அலுவலா்களை நியமிக்கவும் தொடங்கியுள்ளன. இந்த விவரங்களை அந்த ஊடகங்கள் தங்களது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory