» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லட்சத்தீவு நிர்வாகியை விமர்சித்த திரைப்பட பெண் இயக்குநர் மீது தேசதுரோக வழக்கு!

வெள்ளி 11, ஜூன் 2021 5:15:27 PM (IST)

லட்சத்தீவுகள் விவகாரம் தொடர்பாக லட்சத்தீவுகள் நிர்வாகியை விமர்சித்த திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. அவரின்  புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க் கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் நடவடிக்கை மீது பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தான விமர்சனம் தெரிவித்து வந்தார். இதுதொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்குபெற்ற அவர், மத்திய அரசு லட்சத்தீவுகள் நிர்வாகியை உயிரி ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பாஜகவினர் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். ஆளும் அரசின் நிர்வாகியை தரக்குறைவாக விமர்சித்ததாக பாஜகவினர் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பிரஃபுல் கோடா படேலின் நடவடிக்கையால் தான் லட்சத்தீவுகளில் கரோனா தொற்று பரவியதைக் குறிப்பிடவே தான் அவ்வாறு தெரிவித்ததாக ஆயிஷா சுல்தானா விளக்கமளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர் மீதான தேசதுரோக வழக்கிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

unmaiJun 13, 2021 - 05:22:35 PM | Posted IP 162.1*****

where is the freedom of speech. it seems like the administrator of Lakshadweep is the nation and no one should talk against him. his track record is poor and it is a political appointment.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory