» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்!

வெள்ளி 11, ஜூன் 2021 5:06:46 PM (IST)

பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைய உள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் வெளியாகி வந்தன.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முன்னிலையில் முகுல் ராய் மற்றும் அவரது மகன் மீண்டும் இணைந்தனர். இந்நிகழ்வில் பேசிய மம்தா, முகுல் ராயை நாங்கள் வரவேற்கிறோம். கட்சியில் அவர் முக்கிய பங்கு வகிக்கவுள்ளார் எனத் தெரிவித்தார். முகுல் ராய் மீண்டும் திரிணமூல் இணைந்தது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Jun 11, 2021 - 05:37:42 PM | Posted IP 108.1*****

பெரிய வெற்றியா ? என்னத்த எழுதுகிறாய். திரிணாமுல் வெற்றி, அவ்வளுவுதான். பிஜேபி தான் உண்மையான வெற்றி.முந்தய தேர்தலை விட எவ்வளவு முன்னேற்றம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory