» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உடல் முழுவதும் சூடு வைத்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சைக்கோ தொழில் அதிபர் கைது

வெள்ளி 11, ஜூன் 2021 4:19:32 PM (IST)

கேரளத்தில் இளம்பெண்ணின் உடல் முழுவதும் சூடு வைத்து, கண்ணீல் மிளகாய் பொடி தூவி, வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். 

கேரள மாநிலம் கண்ணூரில் வசிக்கும் பங்கு வர்த்தகர் மார்ட்டின் ஜோசப் (33). இவர் கடந்தாண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் 27 வயதான பெண் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் மீண்டும் தனது தாய் வீட்டிற்கே சென்று விட்டார். ஆனால், மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வராவிட்டால் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மார்ட்டின் ஜோசப் மிரட்டி உள்ளார். 

இதனால் பயந்து போன அந்த பெண் மீண்டும் அவரது வீட்டிற்கே வந்தார். ஆனால் அந்த பெண்ணை மீண்டும் அடித்து துன்புறுத்தியதுடன், தனது சிறுநீரை குடிக்க வைத்து வற்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார். தினமும் கொடுமைகளை அனுபவித்து வந்த பெண், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள  அங்கிருந்து தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 

தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது: என்னை படுக்கையில் கட்டிவைத்து துடைப்பம், பெல்ட்டால் அடிப்பார். அவர்  தொடர்ந்து அந்தரங்க பகுதியில் அடிப்பார். சிறுநீர், கழிப்பறையிலிருந்து  தண்ணீரையும் குடிக்க வைத்தார். என்னை தூங்கவிடாமல் தடுக்க, என் மீது  ஏற்படுத்திய காயங்களின் மேல் சூடான நீரை ஊற்றுவார். அவர் என் கண்களில்  மிளகாய் தூள் கலந்த தண்ணீரை தெளிப்பார்’ என்று கூறி உள்ளார்.அதையடுத்து கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் திருச்சூரில் உள்ள பெரமங்கலம் என்ற இடத்தில் வனப்பகுதியில் வைத்து மார்ட்டின் ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று இவர் கொச்சி கொண்டு செல்லப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட மார்ட்டின் ஜோசப் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது. 

இதனிடையே மற்றொரு கொச்சி பெண் ஜூன் 10 அன்று மார்ட்டின் மீது உடல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்து உள்ளார். மார்ட்டினின் மூன்று நண்பர்களான தனேஷ், ஸ்ரீராக் மற்றும் ஜான் ஜாய் ஆகிய மூன்றுபேரையும் போலீசார்கைது செய்துள்ளனர். மூன்று வாகனங்கள், இரண்டு கார்கள் (ஸ்விஃப்ட் மற்றும் பி.எம்.டபிள்யூ) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து கொச்சி நகர போலீஸ் கமிஷனர் நாகராஜு கூறுகையில், இந்த வழக்கிற்கு முன்னர் அதிக  அளவு கவனம் செலுத்தப்படவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், அது உண்மைதான். முன்னர் நாங்கள் இப்போது பயன்படுத்திய எல்லா வளங்களையும் ஆய்வுக்கு பயன்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சட்டப்பூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்தோம். 

அவரது இருப்பிடம், கண்காணிப்பு அறிவிப்புகள், தடைசெய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை நாங்கள் கண்டுபிடித்து உள்ளோம். இதுபோன்ற கடுமையான வழக்கு நகரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை.  "இந்த சம்பவம் புகைப்படங்களுடன் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட பின்னரே, இது ஒரு கடுமையான தாக்குதல் என்பதை நாங்கள் கவனித்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 வீட்டு வன்முறை வழக்குகள் பதிவாகின்றன. இது எங்கள் கவனத்திற்கு வந்ததும், நாங்கள் விசாரணையை திவிரப்பட்டித்தினோம் என்று  கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory