» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜிஎஸ்டி கவுன்சில் ஜூன் 12ஆம் தேதி கூடுகிறது: கோவிட் மருந்துகளுக்கு வரியை குறைக்க பரிசீலனை

வியாழன் 10, ஜூன் 2021 4:53:50 PM (IST)

கோவிட் சிகிச்சை தொடர்பான பொருள்கள் மருந்துகள் கருவிகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஜூன் 12ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குவார். கடந்த மே மாதம் 28ஆம் தேதி கோவிட் சிகிச்சைக்கு உதவும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கவுன்சிலுக்கு பரிந்துரை பதற்காக அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது அந்த குழு தன்னுடைய அறிக்கையை ஜூன் மாதம் 7ம் தேதி தாக்கல் செய்துள்ளது.

குழுவில் உறுப்பினர்களாக உள்ள சிலர் கோவிட்-19 சிகிச்சை பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது உத்தரப்பிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா கோவிட்-19 சிகிச்சை பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் இறுதியில் கவுன்சில் எந்த முடிவு எடுத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அமல் செய்வோம் என்று கூறினார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு அவசியமா என்று அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பொருள்கள் பட்டியல்:

மருத்துவ தரம் உள்ள ஆக்சிசன், பல்சி ஆக்ஸி மீட்டர், கைகளை தன் தூய்மைப் படுத்த உதவும் சானிடைசர், 

ஆக்சிசன் செலுத்துவதற்கு தேவைப்படும் உபகரணங்கள், 

ஆக்சிசன் கான்சன்ட்ரேட்டர், ஆக்சிசன் வெண்டிலேட்டர்ஸ். 

பிபிஇகிட்ஸ்,  என் 95 மாஸ்க், 

அறுவைச் சிகிச்சையின்போது மருத்துவர்கள் பயன்படுத்தும் முகக் கவசங்கள், 

உடலில் வெப்ப நிலையை பரிசோதிக்க உதவும் கருவிகள், கோவிட் -19  சிகிச்சை மருந்துகள். கோவிட்-19 சோதனை கருவிகள்.

கரும் பூஞ்சை நோய்க்கான மருந்துகள்.

கரும் பூஞ்சை நோய்க்கான ஊசி மருந்து அம்போடெரிசினுக்கு ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory