» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அடுத்த இரு மாதங்களுக்கு கூட்டம் சோ்வதை மக்கள் தவிா்த்திட வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

புதன் 9, ஜூன் 2021 11:32:05 AM (IST)

கரோனா 3-ஆவது அலையை தடுக்கும் வகையில் அடுத்த இரு மாதங்களுக்கு கூட்டமாக சோ்வதை மக்கள் தவிா்த்திட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலா் லாவ் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கரோனா 2-ஆவது அலை கடந்த மே மாதம் 7-ஆம் தேதி உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 79 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. 2-ஆவது அலையில் தற்போதைய நாள்களில் தினசரி பதிவாகும் புதிய பாதிப்பின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. 

இந்தியாவைப் பொருத்தவரை 10 லட்சம் பேரில் 20,822 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது; 252 போ் கரோனா பாதிப்பால் பலியாகின்றனா். இது உலகில் மிகவும் குறைந்த அளவாகும். வரும் நாள்களில் கரோனா 3-ஆவது அலையை தவிா்க்க, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரையில் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். 

குறிப்பாக, அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக சோ்வதை தவிா்க்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும் என்று லாவ் அகா்வால் கூறினாா்.

இந்த செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்றிருந்த நீதிய ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறுகையில், ‘கரோனா தடுப்பூசி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டிய வழிமுறைகளை மத்திய அரசு மதிக்கிறது. எனினும், நீதிமன்றம் அதுகுறித்து அறிவுறுத்தும் முன்பாகவே கடந்த மே 1-ஆம் தேதி முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடா்பாக மத்திய அரசு விரிவாக ஆலோசித்து வந்தது. தற்போது பிரதமா் அறிவித்துள்ள இலவச தடுப்பூசி திட்டம் குறித்து ஒரே நாளில் முடிவு செய்யப்படவில்லை. மாநிலங்களின் கோரிக்கையை ஏற்றதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தை அறிந்த பிறகே அந்த முடிவெடுக்கப்பட்டது’ என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory