» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவாக்சினை விட கோவிஷீல்ட்டு கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது: ஆய்வில் தகவல்!!

திங்கள் 7, ஜூன் 2021 5:04:54 PM (IST)

கரோனா தடுப்பூசிகளில் கோவாக்சினை விட கோவிஷீல்ட்டில் கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என ஆய்வில் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவாக்சினை விட கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2 டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2 தடுப்பூசிகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பு அளிப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. பெரிய அளவில், தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்பதை ஆய்வு காட்டுகிறது. தடுப்பூசி போடுவதை விரிவாக்குவதன் மூலம் கொரானோ நோய்த்தொற்றின் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம். தடுப்பூசிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வின் முடிவு தெளிவுபடுத்திக் காட்டுகிறது.

தற்போது, இந்திய மக்கள்தொகையில் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களையும்களையும் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர். ஆயினும் கோவிஷீல்ட்டில் கூடுதலான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்புக் கூறுகள் காணப்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இவற்றைத் தவிர நோய் எதிர்ப்புத் திறனை தரும் வேறு சில நுண்ணிய அமைப்புகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை டி செல்கள். இவை என்றும் வைரஸ் பற்றிய விஷயங்களை நினைவில் கொண்டிருக்கும். மீண்டும் கொரானோ தொற்று ஏற்படும் பொழுது அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடும். ஆன்டிபாடிகள் தவிர மற்ற எதிர்ப்புத் திறன்களை ஆய்வாளர்கள் மதிப்பிடவில்லை. அதனால் கோவாக்சின் திறன் குறைந்தது  என்ற முடிவுக்கு யாரும் போகக்கூடாது.

டாக்டர் ஏ.கே.சிங் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தெரிய வந்தன. ஆய்வின் ஒரு பகுதியாக 515 சுகாதார ஊழியர்களிடம் (305 ஆண்கள், 210 பெண்கள்), இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. 95 சதவிகிதத்தினர் இரண்டு தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளுக்குப் பிறகு செரோபோசிட்டிவிட்டி (அதிக ஆன்டிபாடிகள்) கொண்டுள்ளனர். 425 கோவிஷீல்ட் மற்றும் 90 கோவாக்சின் பெறுநர்களில் முறையே 98.1 சதவீதம் மற்றும் 80 சதவீதம் பேர் ஆண்டிபாடி காட்டியுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது.

தடுப்பூசிகளில் இரண்டு அளவுகளையும் பெற்று பதிலளித்தவர்களில் மொத்தம் 27 பேருக்கு நோய்த்தொற்றுகள் (4.9 சதவீதம்) பதிவாகியுள்ளன. இவற்றில், 25 லேசானவை, இரண்டு மிதமான நோய்த்தொற்றுகள். நோய்த்தொற்றுகளின் விளைவாக எந்த இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவத்துறையினர் ஒரு வழிகாட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory