» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல் விலை ஒரே மாதத்தில் 16-வது முறையாக உயர்வு - லிட்டர் ரூ.95.76-க்கு விற்பனை!!

திங்கள் 31, மே 2021 12:50:43 PM (IST)

ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் விலை ஒரே மாதத்தில் 16-வது முறையாக  உயர்ந்துள்ளது. லிட்டர் ரூ.95.76-க்கு விற்பனை ஆகிறது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதன்படி பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மிக அதிக அளவில் உயரத் தொடங்கியது. அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. கடந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்ட நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட வண்ணம் உள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த் தப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.95.51-க்கும், டீசல் லிட்டர் ரூ.89.65-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.95.76-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.89.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 16-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.33 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.15 காசும் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்திலும் சாமானிய மக்களை பாதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory