» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்குவங்க தலைமைச் செயலரை விடுவிக்க முடியாது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

திங்கள் 31, மே 2021 11:55:59 AM (IST)

கரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளரை திரும்பப் பெறும் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். 

மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரான ஆலன் பந்தோபத்யாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். கரோனா அதிகரித்து வரும் நிலையில், புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக பந்தோபத்யாய்க்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார். 

இந்நிலையில் கரோனா பெருந்தொற்று சூழலைக் காரணம் காட்டி தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையொட்டி தில்லி உள்துறை அமைச்சகத்தில் ஆலன் பந்தோபத்யாய் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory