» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 7ஆம் ஆண்டு நிறைவு: அமித்ஷா வாழ்த்து

ஞாயிறு 30, மே 2021 7:48:07 PM (IST)

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு 7 சாதனை ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது அவர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறியதாவது, ‘‘வளர்ச்சி, பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் மற்றும் முக்கிய சீர்திருத்தங்களின் ஈடுஇணையற்ற ஒருங்கிணைப்பின் தனித்துவமான உதாரணத்தை மோடி அரசு அளித்துள்ளது.’’ என கூறியுள்ளார்.

‘‘இந்த 7 ஆண்டுகளில், நரேந்திர மோடி, தனது உறுதியான, முழுமையான நலத்திட்ட கொள்கைளால், நாட்டின் நலன்தான் மிக முக்கியம் என ஒரு புறமும், மறுபுறம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றியுள்ளார்.’’ என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

‘‘கடந்த 7 ஆண்டுகளாக,  பிரதமர் நரேந்திர மோடியின் சேவை மற்றும் அர்ப்பணிப்பில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாட்டு மக்கள் தொடர்ந்து  வெளிப்படுத்தினர். அதற்காக, நாட்டு மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாம் அனைத்து சவால்களையும் வெல்வோம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை தடைகள் இன்றி தொடர்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்’’ என அமித்ஷா கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory