» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

யாஸ் புயலால் மேற்கு வங்கத்தில் ஒரு கோடி மக்கள் பாதிப்பு, 3 லட்சம் வீடுகள் சேதம்: மம்தா

புதன் 26, மே 2021 6:59:09 PM (IST)

மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

யாஸ் அதி தீவிர புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே இன்று காலை கரையை கடந்த நிலையில், பல பகுதிகளில் உள்ள வீடுகள் பலத்த காற்று மற்றும் கனமழையால் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா, "யாஸ் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து 15,04,506 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புயலால் குறைந்தது ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.பூர்பா மெடினிபூர், தெற்கு 24 பர்கானாக்கள் மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் விரைவில் பார்வையிடவுள்ளேன். கள ஆய்வுக்கு பின் சேதங்களின் மதிப்பு குறித்து இறுதி அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory