» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜூலை 1 முதல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை கட்டணங்கள்: எஸ்பிஐ அறிவிப்பு

செவ்வாய் 25, மே 2021 5:10:00 PM (IST)

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய சேவை கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்பு வைப்பு (பிஎஸ்பிடி) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த புதிய கட்டணங்களானது, ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல், செக் புக், பணப் பரிமாற்றம் மற்றும் பிற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.அதன்படி, எஸ்பிஐ கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்தால் பெறப்படும் கட்டணம்:

ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் ஏடிஎம் மையம் மற்றும் வங்கி கிளைகளில் பணத்தை எடுத்தால் அதற்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி,வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய புதிய கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி ஆகும்.

காசோலை புத்தகக் கட்டணங்கள்:

எஸ்.பி.ஐ வங்கியில் ஒரு வருடத்தில் 10 முறைக்கு மேல் காசோலை வாயிலாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.அதன் பிறகு,10 முறைக்கு மேல் காசோலை வாயிலாக பணம் எடுத்தால் ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி, மேலும்,25 முறைக்கு மேல் எடுத்தால் ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.அவசர காசோலை மூலம், 10 முறைக்கு மேல் எடுத்தால் ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

ஆனால்,மூத்த குடிமக்களுக்கு காசோலை மூலம் பணம் எடுக்கும்போது புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து,எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

இந்த மாத தொடக்கத்தில்,எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 6.70% ஆக குறைத்தது.அதன்படி,எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 30 லட்சம் லோன் பெற்றவர்களுக்கு வட்டி விகிதம் 6.70 சதவீதமாகும்.ரூ.30 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை பெற்றவர்களுக்கு 6.95% வட்டி விகிதமாகும்.மேலும்,ரூ.75 லட்சத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு 7.05% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory