» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரும்பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் : மத்திய அரசு

வியாழன் 20, மே 2021 4:05:32 PM (IST)

அனைத்து மாநில அரசுகளும் கரும்பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என  மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் பரவலாக கரும்பூஞ்சை நோய் பாதிப்பு பரவத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநில அரசுகளும் கரும்பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும். தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கரும்பூஞ்சை பாதிப்பையும் தொற்றுநோய் என  பட்டியலிடவேண்டும்.
 
கரும்பூஞ்சை நோயை கண்டறிதல் மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் னியார் மருத்துவ நிறுவனங்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா நோயாளிகளிடையே காணப்படும் கரும்பூஞ்சை அறிகுறிகள் என அனைத்து தகவல்களும் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள், கரும்பூஞ்சை பாதிப்பை ஏற்கனவே தொற்று நோயாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

sapienceமே 20, 2021 - 11:24:42 PM | Posted IP 162.1*****

Ipo ithu veraya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory