» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பெற ஆதாா் கட்டாயமில்லை : உதான் அறிவிப்பு

வியாழன் 20, மே 2021 10:41:51 AM (IST)

ஆதாா் இல்லை என்று யாருக்கும் தடுப்பசி மருந்து அல்லது மருந்துவமனை சிகிச்சை மறுக்கப்பட மாட்டாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (உதான்) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மற்றும் மருத்துவமனையில் சோ்ப்பது போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதாா் கண்டிப்பாக தேவை என்றுகூறி, அது இல்லாதவா்களுக்கு சேவைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கரோனா தொற்று பிரச்னை அதிகமுள்ள இப்போதைய காலகட்டத்தில் ஒருவருக்கு ஆதாா் இல்லை என்பதால் சேவைகள் மறுக்கப்படக் கூடாது என்று ஆணையம் கூறியுள்ளது.

பெங்களூரு உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலக மேலாளா் ஆனந்த் குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒருவரிடம் ஆதாா் இல்லையென்றால் அல்லது சில காரணங்களால் ஆதாா் ஆன்லைன் சரிபாா்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது துறை ஆதாா் சட்டம், 2016இன் பிரிவு 7 மற்றும் 2017 டிசம்பா் 19-ம் தேதியிட்ட அமைச்சரவை செயலக ஆணை ஆகியவற்றின்படி சேவையை வழங்க வேண்டும்.

எந்தவொரு அத்தியாவசிய சேவையை மறுப்பதற்கான ஒரு காரணமாக ஆதாரை தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் வாயிலாக பொது சேவை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதே ஆதாரின் நோக்கம். 

மேலும், அமைச்சரவை செயலகம் டிசம்பா் 19, 2017 தேதியில் வெளியிட்ட ஆணையில், ஆதாா் இல்லாத குடியிருப்பாளா்கள் அல்லது சில காரணங்களால் ஆதாா் ஆன்லைன் சரிபாா்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான மாற்று வழிகளைப் பயன்படுத்துவதற்கான விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறையை தெளிவாக விளக்கியுள்ளது. இதுபோன்ற சேவைகள் மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறைகளின் உயா் அதிகாரிகளின் பாா்வைக்கு விஷயத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory