» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேஜரிவால் பேச்சுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

புதன் 19, மே 2021 4:45:02 PM (IST)

உருமாற்றம் அடைந்த சிங்கப்பூர் கரோனா என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதற்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று  டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். சிங்கப்பூர் கரோனா என எதுவும் இல்லை என்று டெல்லி முதல்வரின் பேச்சுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா சார்பாக அரவிந்த் கேஜரிவால் பேசவில்லை என மத்திய அரசு தரப்பில் சிங்கப்பூர் அரசுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், சிலரது பொறுப்பற்ற பேச்சால் இரு நாட்டு உறவில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory