» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி: கேஜரிவால் அறிவிப்பு

செவ்வாய் 18, மே 2021 5:35:30 PM (IST)

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இன்றைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 22,111 பேர் உயிரிழந்துள்ளனர். 50,863 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14,02,873 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவராக இருந்தால் மாதந்தோறும் 2500 ரூபாய் பென்சனாக வழங்கப்படும். நிதியுதவியும் உண்டு. கணவர் இறந்தால் மனைவிக்கு பென்சன், மனைவி இறந்தால் கணவர் பென்சன் பெறலாம். திருமணம் ஆகாத நபர் இறந்திருந்தால் பெற்றோர் பென்சனை பெறமுடியும். ஏற்கனவே பெற்றோர்களில் ஒருவர் இறந்து, தற்போது கரோனா தொற்றால் மற்றொருவர் இறந்து குழந்தை தவித்தால், அந்த குழந்தை 25 வயது ஆகும் வரை 2500 ரூபாயை பெற முடியும். அவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory