» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி

செவ்வாய் 4, மே 2021 10:40:02 AM (IST)

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும், தொற்று பரவல் குறையாமல் உள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த யோசித்து வரும்  மத்திய அரசு, பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், கரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பாதிக்கப்படாத அம்சத்துடன் கூடிய ஊரடங்கு மட்டுமே கரோனா பரவலை தடுப்பதற்கான ஒரே வழி. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கரோனாவால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்” என தனது டுவிட் பதிவில் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். 


மக்கள் கருத்து

trapமே 4, 2021 - 01:13:15 PM | Posted IP 108.1*****

america karan also told same

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Thalir Products





Black Forest Cakes




Thoothukudi Business Directory