» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை மே 3ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வர உச்சநீதிமன்றம் உத்தரவு

திங்கள் 3, மே 2021 4:36:35 PM (IST)தலைநகர் டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை மே 3ம் தேதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் கோவிட் 19 நெருக்கடிகள் குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடந்த விசாரணை முடிவில் மத்திய அரசுக்கு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த உத்தரவுகள் குறித்த அறிக்கை மே 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு வெளியானது.

நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான சிறப்பு அமர்வு, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு  உடனடியாக தேவையான ஆக்சிஜன் தொகுப்புகளை நிறுவவும் அவசரகால ஆக்சிஜன் சிலிண்டர்களின் இருப்பை பரவலாக்கவும் மத்திய அரசிற்கு ஆணையிட்டுள்ளது. ‘‘அவசரகால ஆக்சிஜன் தொகுப்புகள் அடுத்த நான்கு நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் மாநிலங்களுக்கு தற்போதைய ஆக்சிஜன் விநியோகத்துடன் கூடுதலாக, தினசரி அடிப்படையில் ஆக்சிஜனை ஒதுக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் தனது 64 பக்க உத்தரவில் கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் எந்தவொரு தகவலையும் அல்லது எந்தவொரு தளத்திலும் உதவி தேடும்  அல்லது உதவி வழங்கும் தனிநபர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எந்தவொரு தடங்கலுக்கும் நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்து தலைமைச் செயலாளர்கள் / இயக்குநர்கள் ஜெனரல் / போலீஸ் கமிஷனர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

உயிர்காக்கும் ஆக்ஸிஜன், மருந்துகள் மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது பற்றிய குறைகளை கூற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் விதிக்கப்படக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் நகலை நாட்டின் அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் அனுப்புபடி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு (நீதித்துறை) நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனை சேர்க்கை விதிமுறைகள்

மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை குறித்த தேசிய கொள்கையை வகுக்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்த கொள்கையை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

"மத்திய அரசால் அத்தகைய கொள்கையை உருவாக்கும் வரை, எந்தவொரு மாநிலத்திலும் அல்லது யூனியன் பிரதேசத்திலும் எந்தவொரு நோயாளிக்கும் மருத்துவமனையில் அனுமதி அல்லது அத்தியாவசிய மருந்துகள் மறுக்கப்படக்கூடாது. அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் குடியிருப்பு சான்றுகள் அல்லது அடையாள ஆதாரம் இல்லாவிட்டாலும் மருத்துவமனையில் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Nalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory