» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கரோனா நோயாளிகள் பலி

திங்கள் 3, மே 2021 3:29:09 PM (IST)

கர்நாடகத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்கள் மூலமாக பல்வேறு நகரங்களுக்கு மத்திய அரசால் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், சாம்ராஜ்நகரில் திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால், 24 கரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products

Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory