» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக முதல்வராகும் மம்தா : ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்

திங்கள் 3, மே 2021 3:18:16 PM (IST)

மேற்கு வங்கத்தில்  212 இடங்களைக் கைப்பற்றி பிரமாண்ட வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது.

தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. மாநிலத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார்.

இன்று மாலை 7 மணிக்கு ஆளுநர் தனகரை அவரின் மாளிகையில் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். அப்போது மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது இது தொடர்பாக ஆளுநர் தனகர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "திங்கள்கிழமை மாலை 7 மணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என்னைச் சந்திக்க உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Thalir Products





Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory