» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா பரவ காரணமா? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

திங்கள் 3, மே 2021 12:50:49 PM (IST)

கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தி உள்ளது.

கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக்கோரி முன்னாள் அமைச்சரும், கரூர் அ.தி.மு.க வேட்பாளருமான விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரசாரம் செய்ய அனுமதித்ததே தொற்று பரவலுக்கான காரணம். இதற்காக தேர்தல் கமிஷன் மீது கொலை வழக்கு சுமத்தினாலும் தவறில்லை’ என கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது  அப்போது கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் அந்த தவறை சரிசெய்ய முயலுங்கள். உள்நோக்கத்துடன் உயர்நீதிமன்றம் கருத்து கூறவில்லை, கருத்துக்களை சரியான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் என  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory