» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளத்தில் மீண்டும் இடதுசாரி கூட்டணி ஆட்சி: வாக்காளர்களுக்கு சீதாராம் யெச்சூரி நன்றி

திங்கள் 3, மே 2021 12:20:59 PM (IST)கேரளத்தில் அமோக வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நன்றி தெரிவித்துள்ளார்.

மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மீ்து முன்எப்போதும் இல்லாதவகையில் நம்பிக்கை வைத்த கேரள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா உள்பட மக்கள் சந்தித்த சவால்களை இடதுசாரி கூட்டணி அரசு சிறப்பாக கையாண்டது. பெருந்தொற்றை எப்படி கையாள்வது என்று உலகத்துக்கே ‘கேரள மாடல்’ என்று காட்டியது. இனியும் அந்த சவால்களை சந்திக்கும்.

நாடும், கேரள மாநிலமும் தற்போது கரோனாவால் ஏற்பட்ட வாழ்வாதார பிரச்சினை, மதச்சார்பின்மையை பாதுகாப்பது என்ற இரட்டை ஆபத்துகளை சந்தித்து வருகின்றன. இதில் இடதுசாரி கூட்டணி தனது பணியை உரிய முறையில் நிறைவேற்றும். கேரள மக்களும் எப்போதும்போல் தொடர்ந்து ஒன்றாக நிற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த நேரத்தில் கரோனாவுக்கு பலியானோருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த கரோனாவை ஒன்றாக சேர்ந்து முறியடிப்பதுடன், சிறப்பான இந்தியாவையும், கேரளாவையும் உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam

Thalir Products


Thoothukudi Business Directory