சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் டிரெய்லர்!

Sponsored Ads


சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் வியாழன் 24, அக்டோபர் 2024
நேரம் 10:03:04 AM (IST)

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அமரன். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.அமரன் திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில் அமரன் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.



Thoothukudi Business Directory