கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் விக்ரம்: டைட்டில் டீசர் வெளியீடு

Sponsored Ads


கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் விக்ரம்: டைட்டில் டீசர் வெளியீடு
பதிவு செய்த நாள் சனி 7, நவம்பர் 2020
நேரம் 5:33:55 PM (IST)

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இசை - அனிருத். 2021 ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் ஹாசன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து படத்தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தலைப்பின் டீசரும் வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory