விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்

Sponsored Ads


விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்
பதிவு செய்த நாள் சனி 15, பிப்ரவரி 2020
நேரம் 11:50:26 AM (IST)

மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.Thoothukudi Business Directory