ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் டிரைலர்

Sponsored Ads


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 17, டிசம்பர் 2019
நேரம் 10:54:18 AM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தர்பார் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற தர்பார் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர். இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது.Thoothukudi Business Directory