ரஜினியின் பேட்ட படத்தில் அனிருத் இசையமைத்துள்ள மரண மாஸ் பாடல்!

Sponsored Ads


ரஜினியின் பேட்ட படத்தில் அனிருத் இசையமைத்துள்ள மரண மாஸ் பாடல்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 4, டிசம்பர் 2018
நேரம் 4:30:41 PM (IST)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத். பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். டிசம்பர் 9 அன்று பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்கிற பாடல் வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை எஸ்பிபி-யும் அனிருத்தும் பாடியுள்ளார்கள். இதற்கு அடுத்ததாக 7-ம் தேதி 2-வது பாடல் வெளியிடப்படுகிறது. இதனால், முழுப் பாடல்களின் வெளியீட்டுக்கு முன்பு இரு பாடல்கள் வெளியாகவுள்ளன.Thoothukudi Business Directory