சந்தன கடத்தல் வீரப்பனின் கதையில் உருவாகும் வனயுத்தம் படத்தின் டிரைலர்

Sponsored Ads


சந்தன கடத்தல் வீரப்பனின் கதையில் உருவாகும் வனயுத்தம் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 26, மார்ச் 2012
நேரம் 10:44:43 PM (IST)

சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் கதை, வனயுத்தம் என்ற பெயரில் படமாக தயாராகிறது. போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமாராக அர்ஜூன், கிஷோர் வீரப்பனாகவும் நடிக்கிறார்கள். முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும், சுரேஷ் ஒபராய் கன்னட நடிகர் ராஜ்குமாராகவும் நடிக்கிறார்கள். ராஜ்குமாரின் மனைவியாக சுலக்ஷனா நடிக்கிறார். ரவிகாலே, சம்பத் ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரிகளாக வருகிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தீப் சவுதா இசையமைக்கிறார். குப்பி படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார். அக்ஷயா கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஸ்ரீனிவாஸ், ஜகதீஷ் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியிலும், தலக்கோணம் காட்டிலும் நடைபெற்று வருகிறது.Thoothukudi Business Directory