தூத்துக்குடி மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கொம்பு திருக்கை மீன்

Sponsored Ads


தூத்துக்குடி மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கொம்பு திருக்கை மீன்
பதிவு செய்த நாள் சனி 23, ஜனவரி 2010
நேரம் 8:19:36 PM (IST)

தூத்துக்குடி, சகாயமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவர் தனக்கு சொந்தமான படகு மூலம் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல பீட்டர், தலைமையில் 8 மீனவர்கள் தூத்துக்குடியிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2மணி அளவில், இவர்களின் வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியது. பெரிய மீனுடன் ஏற்கனவே இவர்களது வலையில் சிக்கிய சிறிய மீன்களுடன் உடனடியாக இவர்கள் கரை திரும்பினர். கரை திரும்பியதும் வலையை பிரித்து பார்த்தபோது, அந்த மீன் ராட்சத கொம்பு திருக்கை என தெரியவந்ததின் வீடியோ தொகுப்பு. - ஒளிப்பதிவு: A.லட்சுமணன்



Thoothukudi Business Directory