» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பாராளுமன்ற தேர்தல் : ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறும்!

சனி 16, மார்ச் 2024 4:29:09 PM (IST)

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. 

அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தல் அட்டவணையை அறிவித்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் இருந்தனர். நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும்.

3ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் மேம் 7ம் தேதி நடைபெறுகிறது.

4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது.

5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதி நடைபெறுகிறது.

6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் முடிவு ஜூன் 4ம் அறிவிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி முதல் தொடங்குகிறது.

வேட்புமனு கடைசி நாள் மார்ச் 27ம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி அன்று நடைபெறுகிறது.

வேட்பு மனு வாபஸ் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம்: ( ஒரே கட்டமாக தேர்தல்)

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரே கட்ட தேர்தலுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.


* வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20

* வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27

* வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28

* வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30

* வாக்குப்பதிவு- ஏப்ரல் 19

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory