» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

வெள்ளி 1, மார்ச் 2024 8:13:39 AM (IST)

மீண்டும் தப்பித்தவறி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது  என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும், காவிரி நீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி  பேசுகையில், மீண்டும் தப்பித்தவறி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. இதை நான் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்து பேசவில்லை, எதிர்க்கட்சி தலைவராக இருந்து பேசவில்லை, முன்னாள் முதல்-அமைச்சராக பேசவில்லை. 

சாதாரண விவசாயி என்ற முறையில் என் மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன். தி.மு.க. ஆட்சியிலே விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. விவசாய தொழிலாளிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில்  டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

JOHN அவர்களேMar 2, 2024 - 09:18:26 AM | Posted IP 172.7*****

அது எல்லாம் நம்ம மக்கள் பணம், அவங்க குடும்பத்து பணமா? ஸ்மார்ட் சிட்டியே சுத்தமாக இல்லை , தினமும் சுத்தப்படுத்த துப்பில்லை 🥱, அங்கங்கே கால்வாய்களில் எல்லாம் ஓட்டை , அடைப்பு , சாக்கடை , சிமெண்ட் சாலையில் மணல் குவியலாக இருக்கு.

JOHNMar 1, 2024 - 09:06:37 PM | Posted IP 172.7*****

DMK GOVT IL ROAD / BRIGDE WORK SUPER BUT GROSSERY EXPENSE HIGH

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory