» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்
செவ்வாய் 6, பிப்ரவரி 2024 4:17:39 PM (IST)
அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை, சர்வாதிகார முறையில் நடைபெற்றது. இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம்சாட்டி இருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதி, அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும் மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.