» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட மம்தா முடிவு: காங்கிரஸ் அப்செட்!
புதன் 24, ஜனவரி 2024 5:13:32 PM (IST)
மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
"காங்கிரஸ் கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் இணைவோம்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜகவை தோற்கடிக்க எதையும் செய்வோம் என்று கூறியவர் மம்தா பானர்ஜி. மம்தாவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணிக்கு வலுவான தூண்கள் என்று ராகுல் காந்தி தெளிவாக தெரிவித்து இருந்தார்.
மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இந்திய கூட்டணி கட்சிகளில் உள்ள அனைவரையும் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் சேரும்படி காங்கிரஸ் தலைவர் பலமுறை தெரிவித்து இருந்தார்".
இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
கந்தசாமிJan 25, 2024 - 02:02:15 PM | Posted IP 172.7*****
கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு எழுபத்தைந்து சதவீதமும் மற்ற கட்சிகளுக்கு இருபத்தைந்து சதவீதமும் பிரித்தால் பிரச்சினை வராது
TWO LEAFJan 25, 2024 - 06:17:37 PM | Posted IP 172.7*****