» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 16, ஜனவரி 2024 1:19:04 PM (IST)
காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் பகிர்ந்திருந்த நிலையில், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், "133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவிய தமிழ்நாடு. தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்தவர் திருவள்ளுவர்.
உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி! - என்று தெரிவித்துள்ளார். காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் பகிர்ந்திருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இக்கருத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.