» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் இபிஎஸ் தேர்வு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 23, பிப்ரவரி 2023 11:01:31 AM (IST)

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ஆம் தேதி கூடிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு அளித்ததை எதிா்த்து, ஓ.பன்னீா் செல்வம் தரப்பு பல்வேறு மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அமா்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீா் செல்வம் ஆகிய இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

மேலும், இரு தரப்பினரும் எழுத்துபூா்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்வதாக தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு வெளியே தொண்டர்கள் குவிந்துள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory