» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திரிபுரா, நாகலாந்து, மேகாலயா 3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

புதன் 18, ஜனவரி 2023 3:27:58 PM (IST)

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதியும் நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவையில் பதவிக் காலம் இந்தாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் மூன்று மாநிலங்களிலும் உள்ள 60 சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் மூன்று மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தார். திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதியும் நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் ஜனவரி 21ஆம் தேதியும், மேகாலாயா மற்றும் நாகலாந்துக்கு ஜனவரி 31ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது. வேட்புமனு திரும்பப் பெற திரிபுராவுக்கு பிப்ரவரி 2ஆம் தேதியும், பிற மாநிலங்களுக்கு பிப்.10 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!

மேலும், தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி உள்பட நாடு முழுவதும் காலியாகவுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாநில சட்டப்பேரவை மற்றும் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory