» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் ஏற்க முடியாதது: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு!

வெள்ளி 11, நவம்பர் 2022 5:39:10 PM (IST)

ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து அளித்த தீர்ப்பை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுவிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. 

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory