» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது: எடப்பாடி பழனிசாமி அதிரடி

வியாழன் 8, செப்டம்பர் 2022 12:45:56 PM (IST)

அதிமுகவுக்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. 

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், 72 நாட்களுக்கு பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அறைகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது அ.தி.மு.க.வை சிதைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நமது வெற்றி ஒரு பாடமாக இருக்கும். பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறோம் என கூறினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கட்சியின் நலன் கருதி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி கட்சி அலுவலகத்தில் சிலர் நுழைந்தனர். அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தோம்.

வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது புகார் அளித்தோம், தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நீதிமன்றத்தை நாடினோம் நீதிமன்றமும் உத்தரவிட்டது. நேற்று தான் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; 

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சோதனை ஏற்படும் போதெல்லாம் சாதனை படைத்துள்ளது.அ.தி.மு.க. பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும். அ.தி.மு.க.வில் பிளவு என்பது கிடையாது. சிலர் துரோகம் செய்தார்கள் அவர்கள் மீது பொதுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நீக்கப்பட்டார்கள். ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார்.


மக்கள் கருத்து

hbgfegbkjSep 11, 2022 - 04:41:58 PM | Posted IP 162.1*****

ops, sasikala, tinakaran ellam frauds

அம்மாவின் உண்மை தொண்டன்Sep 9, 2022 - 03:46:35 PM | Posted IP 162.1*****

நீங்கள் திமுகவை நம்பினாலும் OPS ஐ நம்பாதீர்கள். இப்போது அவர் ஒரு நிகழ்ச்சியில் சசியை சந்தித்து உள்ளதா செய்தி வருகிறது. சசியை எதிர்த்து தர்மயுத்தம் நாடகம் போட்டது பதவிக்காக , இப்போது அதே பதவிக்காக அவ்ருடன் கூட்டுசேருகிறார் . இவர்கள் குரூப் அப்படித்தான் சேருவார்கள். இவர்போல மற்றொரு கட்சியில் ஒருவர் இருக்கிறார், அவர் சசி அந்த கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறார், இப்படித்தான் அவர்கள் குரூப் ஓன்று சேர்ந்து கட்சிக்கு குழிபறிப்பார்கள். ஆனால் அந்த கட்சி இவர்களையெல்லாம் தட்டிவைப்பார்கள் அது சாத்தியமில்லை. அதேபோல ADMK அவர்களை தூக்கியெறியுங்கள் ......ADMK வெற்றிபெறும்.

RathinaveluSep 8, 2022 - 04:25:58 PM | Posted IP 162.1*****

"அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சோதனை ஏற்படும் போதெல்லாம் சாதனை படைத்துள்ளது" தொடர்ந்து மூன்றுமுறை தேர்தலில் தோற்று வரலாறு காணாத சாதனை செய்துள்ளோம்.

RathinaveluSep 8, 2022 - 04:23:18 PM | Posted IP 162.1*****

"அதிமுகவில் பிள்வு இல்லை" இழவு தான் "ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது" - "சிறையிலும் சேரமாட்டோம். திமுக அரசு அப்படிச்செய்யுமானால் "கொலை வேறு நிலத்திருடு வேறு" என்று வாதத்தின் அடிப்படையில் வழக்குப் போடுவோம்

MGR AANAISep 8, 2022 - 03:47:14 PM | Posted IP 162.1*****

சரியான முடிவு.உங்களது இந்த முடிவுதான் அதிமுக வளர்ச்சிக்கு உதவும். டயர் கும்பிடு புகழ் OPS ஐ சேர்க்காதீர்கள். இவரது குரூப் சிலரையும் களை எடுத்துவிட்டால், பிஜேபி உடன் இணைந்து உங்கள் தலைமையில் அம்மாவின் ஆட்சிதான்.

superSep 8, 2022 - 01:44:42 PM | Posted IP 162.1*****

super super super.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory