» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நாட்டு மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி எப்போது போடப்படும்? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

புதன் 22, டிசம்பர் 2021 4:50:58 PM (IST)

நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில், மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால், தடுப்பூசி போடும் பணியை இன்னும் துரிதப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், பூஸ்டர் தடுப்பூசி போடலாமா என்பது குறித்து வல்லுனர்கள் குழுவினர் ஆலோசனை நடத்திவருகின்றனர். 

இந்நிலையில், நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில், மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். தடுப்பூசி தொடர்பாக ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலையும் ராகுல் காந்தி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். 

அதில், தற்போதுள்ள வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால், டிசம்பர் மாத இறுதிக்குள் 42 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்துவார்கள் என்றும், கொரோனா 3வது அலையை சமாளிக்க வேண்டுமானால், டிசம்பர் மாத இறுதிக்குள் 60 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு ஒரு நாளைக்கு 61 மில்லியன் (6.1 கோடி) டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் தற்போது மிகவும் குறைவான அளவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 5.8 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory