» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

செவ்வாய் 9, நவம்பர் 2021 3:21:06 PM (IST)அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்தும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே "ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. 

இதில் கமி‌ஷன் வாங்கி உள்ளனர். பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். "ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும். இதில் ஸ்மார்ட் சிட்டி காண்டிராக்ட் எடுத்தவர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை பாயும். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதுவும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory