» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வியாழன் 2, செப்டம்பர் 2021 12:48:14 PM (IST)

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ  செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மனத்தின் மீது பேசிய முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கூறியதாவது: 

பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. பொருளாதார நலனுக்கும், சிறு,குறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory