» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தயாநிதி யை கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி: கண்கலங்கிய துர்க்கா ஸ்டாலின்!

வெள்ளி 7, மே 2021 11:32:32 AM (IST)தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியை உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றார். 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.  இதையடுத்து 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார். அவரை உதயநிதி ஸ்டாலின் வரவேற்று கட்டியணைத்தார். முன்னதாக நேற்று மு.க.அழகிரி, முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தம்பி ஸ்டாலினைப் பாா்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவாா் என்று கூறியிருந்தார். 

மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். பெருமைமிகு தருணத்தில் அவர் ஆனந்தக்கண்ணீருடன் இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes


Thoothukudi Business Directory