» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் உறுதி

திங்கள் 15, பிப்ரவரி 2021 12:12:42 PM (IST)

இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் மோடி கூறினார்.

சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது: மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கை சிறைகளில் இப்போது ஒரு இந்திய மீனவர்கூடஇல்லை. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இதுவரை 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் கடலோர பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இலங்கை  தமிழர்களின் நலனை மத்திய அரசு உறுதி செய்துவருகிறது. இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனையை இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்.  இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory