» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

ரஜினியிடம் ஆதரவு கேட்போம்! சட்டமன்றத்தில் மநீம குரல் கண்டிப்பாக ஒலிக்கும் - கமல்ஹாசன் பேட்டி

வியாழன் 5, நவம்பர் 2020 3:45:09 PM (IST)

"சட்டமன்ற தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்போம்; நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். பாஜக வேல் யாத்திரையை ரத்து செய்தது நல்லதே. வேலை வாங்கிகொடுப்பதே எனது வேலையாக இருக்கும். நான் பி டீமாக இருந்தது இல்லை. புழகத்தில் இல்லாத மனுஸ்மிருதி புத்தகத்தை பற்றி இப்போது பேச தேவையில்லை. சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம். ரஜினிக்கு அவரது உடல்நலன் தான் முக்கியம். அரசியல் பிரவேசம் பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.  

பழி போடும், பழிவாங்கும் அரசியல் அல்ல எங்களுடையது; வழிகாட்டும் அரசியல். நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகம். ஊழலை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.நல்லவர்களுடன் தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். நல்லவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கான 3வது கூட்டணி அமைந்துவிட்டது.நான் எங்கு போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில் தெரிய வரும் சட்டமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக ஒலிக்கும். எனது அரசியலமைப்பு சட்டத்தில் கை வைத்தால் நடப்பதே வேறு. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

DavidNov 20, 2020 - 03:13:52 PM | Posted IP 108.1*****

Please contest in Tuty, we will support you

உண்மNov 17, 2020 - 01:40:31 PM | Posted IP 108.1*****

கூத்தாடிகள் கூத்தாடி கூடாரத்துக்கு தான் சேரும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Thalir Products

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory