» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
பணம் பறிக்கும் நோக்கத்துடன் லெட்டர் பேடு கட்சிகள் செயல்படுகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்
புதன் 14, அக்டோபர் 2020 12:51:56 PM (IST)
தமிழகத்தில் அதிக அளவில் அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் உள்ளூர் ஊராட்சியிடம் மட்டுமே அனுமதி பெற்றுச் செயல்பட்டு வருவதாகவும், கொதிகலன் ஆய்வாளர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் துறையின் அனுமதி மற்றும் தீயணைப்புத் துறை போன்ற துறைகளின் அனுமதி உட்பட எவ்வித அனுமதியும் பெறவில்லை எனவும் குறிப்பிட்ட தமிழ்நேசன், "கடந்த 2020 ஜனவரி 5 அன்று குஜராத்தில் இதுபோன்ற சிலிண்டர் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் இருப்பதால் அந்த கியாஸ் நிறுவனம் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று (அக்டோபர் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, பணம் பறிக்கும் நோக்குடன் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தொடர்ந்து, கொரோனா காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் மிகவும் அவசியமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்டு, மனுதாரர் சார்ந்த அரசியல் கட்சி எதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "தமிழகத்தில் அதிக அளவில் அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டு, பலரிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. இதுபோன்ற லெட்டர் பேட் கட்சிகளால் பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்” எனக் கண்டித்தனர். இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
புதிய அரசியல் கட்சி தொடங்க தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் அனுமதி வழங்குகிறது என்ற கேள்வியை முன்வைத்த நீதிபதிகள், "குறைந்த பட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி என அனுமதி வழங்க வேண்டும்” என அறிவுறுத்தினர். இதுபற்றி தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் சட்டத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
ஆனால் உண்மைOct 18, 2020 - 05:16:18 PM | Posted IP 108.1*****
எல்லா கட்சிகளும் தான்
TAMILANOct 16, 2020 - 04:28:43 PM | Posted IP 173.2*****
Letter pad கட்சிகளுக்கு சரியான ஆப்பு. வாழ்த்துக்கள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்திலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக வெற்றி பெறப்போகிறது: நடிகை குஷ்பு பேச்சு
ஞாயிறு 10, ஜனவரி 2021 6:40:06 PM (IST)

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் : முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 1, ஜனவரி 2021 12:08:48 PM (IST)

புதுவையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை: பிரதமர் அதிருப்தி
சனி 26, டிசம்பர் 2020 4:54:36 PM (IST)

மக்களை பாதிக்கும் சிலிண்டர் விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 16, டிசம்பர் 2020 11:47:40 AM (IST)

7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் உத்தரவு
சனி 21, நவம்பர் 2020 3:17:13 PM (IST)

தமிழ் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஞாயிறு 15, நவம்பர் 2020 9:59:30 AM (IST)

MAKKALNov 28, 2020 - 04:57:36 PM | Posted IP 173.2*****